Home செய்திகள் வத்திராயிருப்பு அருகே சிதலமடைந்த ஆலய தெப்பக்குளம்அறநிலையத்துறை கண்டு கொள்ளுமா?

வத்திராயிருப்பு அருகே சிதலமடைந்த ஆலய தெப்பக்குளம்அறநிலையத்துறை கண்டு கொள்ளுமா?

by mohan

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சிக்கு பாத்தியப்பட்டட மாவூத்தில் அமைந்துருக்கும் உதயகிரி நாதர், சடதாரியம்மன், கருப்பசாமி கோயில், அஞ்சநேயர் கோயில், மலையின் உச்சியில் அமைந்துருக்கும் பெருமாள் கோயில் போன்ற கோயில்கள் அமைந்துள்ளது.இக்கோயில் சுமார் 448 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், பல நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது.இக்கோவிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, புராட்டசி, சித்திரை திருவிழா, மாதந்தோறும் அமாவாசை போன்ற நாட்களில் வந்து தரிசனம் செய்து சென்று கொண்டு இருக்கிறார்கள்.இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட, தெப்பக்குளம் பாராமரிப்பு செய்யமால், சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் இடிந்த நிலையில் உள்ளது.தெப்பக்குளத்தில் படிக்கட்டுகள் சரியில்லாத காரணத்தால், பக்தர்கள் குளிக்கும் போது நீரில் முழ்கி 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் இறப்பதற்க்கு இடிந்துள்ள படிக்கட்டுகள் காரணமாக இருந்து வருகிறது.மேலும், உயிர்பலியை தவிர்க்கவும், இக்கோவிலின் தெப்பக்குளத்தை பராமரிப்பு செய்ய இதனை சார்ந்த கோவில் நிர்வாகிகளும், அற நிலைத்துறையை சார்ந்தவர்களும் இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை.மேலும், இக்கோவிலுக்கு வந்து செல்லும் பெண் பக்தர்களுக்கு கழிப்பிட வசதியும், பாதுகாப்பற்ற சுழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.இக்கோவிலை சுற்றி அந்நியர்கள் மது, சூது, சூதாட்டம் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது, இதனை தடுக்க முடியாத சூழ்நிலையில் பக்தர்கள் இருந்து வருகின்றனர். இதனை கோவில் நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறதாம்.ஆகவே, சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அலுவலர்கள், இந்த புனிதமிக்க பெருமாள் ஆலய தெப்பக்குளம் படிக்கட்டுகள், சிதலமடைந்த மதிற்சுவர்களை உடனடியாக சீரமைக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!