
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தனியார் நிர்வாகம் சாலையில் சரியாக பராமரிக்காமல் இருப்பதால் பலர் விபத்தில் சிக்கி வாகன பழுது டயர் வெடித்து சாலையில் நிற்கும் அவலம் இதனால் உயிர் பலியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது அசம்பாவிதம் நடக்கும் நடவடிக்கை எடுக்குமா தனியார் சுங்க நிறுவனம் மதுரை மாவட்டம் கன்னியாகுமரி பெங்களூர் நான்கு வழி சாலை சமயநல்லூர் ரிங் ரோடு அருகே சுமார் கால் அடி ஆழமும் சுமார் 5 அடி நீளமும் உள்ள மெகா சைஸ் இரண்டு பள்ளங்கள் உள்ளது நான்கு வழி சாலையில் கார்கள் மற்றும் வாகனங்கள் அப்பளத்தை கவனிக்க முடியவில்லை இதனால் வேகமாக வரும் கார் திடீரென இந்த பள்ளத்தை பார்க்கும் பொழுது பிரேக் அடிக்கிறார்கள் அப்பொழுது பின்னால் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் கார்கள் மீது மோதும் நிலை ஏற்படுகிறது இதுபோக பள்ளத்தில் கடந்த 5 நாட்களில் தினசரி 6 முதல் 7 கார்கள் விழுந்து வாகனம் டயர் வெடித்து சிதறி உள்ளன மெத்தன போக்குடன் செயல்படும் சுங்க (டோல்கேட்) தனியார் நிறுவனம் சாலைகளை பராமரிப்பதே இல்லை இதனால் உயிர் பலியும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது வாகன ஓட்டி கூறுகையில் டோல்கேட்டில் மறக்காமல் பணம் மட்டும் பிடிக்கிறார்கள் ஆனால் சாலை மிகவும் மோசமாக உள்ளது தற்போது இப்படத்தை கவனிக்காமல் நான் வாகனத்தை அதில் இறங்கியதால் எனக்கு இரண்டு பெயர்களும் ஒரே பக்கத்தில் போய் விட்டது என தெரிவித்தார் இதனால் எனக்கு சுமார் முப்பத்தி எட்டு ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் மேலும் வாகனத்தில் சஸ்பென்ஷன் விட்டதாகவும் குற்றம் சாட்டினார் செயல்படுகிறது டோல் பிளாசா என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர் உடனடியாக சாலையை சரி செய்து வாகன ஓட்டிகளின் உயிர் காக்க உத்தரவாதம் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார் இல்லையென்றால் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மக்களிடம் தினசரி லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கும் டோல் பிளாசா சாலையை சரி செய்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் உயிர் காக்குமா ….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.