
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி முதல் நிலை காவலர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.திருமங்கலத்தில் உள்ள சிலம்பாட்ட பயிற்சி பள்ளியில் பயின்று வரும் முதல்நிலை காவலர் பாலமுருகன் என்பவர் சமீபகாலமாக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மன உளைச்சலாலும் பல்வேறு பிரச்சினைகளாலும் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் எவ்வித தீங்கும் ஏற்படாது என்பதை உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வண்ணம் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.காலை 7 மணி அளவில் தனது சாதனை முயற்சியை துவக்கிய பாலமுருகன் நண்பகல் 3 மணி அளவில் நிறைவு செய்தார்.அவரிடம் இது குறித்து கேட்ட போது, சமீபகாலமாக அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களை தடுப்பதற்கும் காவலர்களின் உடற்கட்டு திறனை வெளிப்படுத்தவும், மது ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாதனை முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், அடுத்த முயற்சியாக 30 மணி நேர தொடர் சிலம்பம் சுற்றி சாதனை செய்யும் முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் முதல் நிலை காவலர் பாலமுருகன் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.