மதுரை கோட்டத்தில் புதிய ரயில்வே மேலாளர் பதவி ஏற்பு.

மதுரை கோட்ட புதிய ரயில்வே மேலாளராக பி ஆனந்த் வியாழக்கிழமை அன்று (12.8.2021) பதவியேற்றுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே இயந்திரவியல் பொறியாளர் சேவைப் பிரிவை சேர்ந்தவர். இவர் தென் கிழக்கு இரயில்வேயில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ரயில்வே வாரியத்தில் மனிதவள திட்டத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வாரணாசி ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் முதன்மை இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றியுள்ளார். மதுரை கோட்டத்திற்கு வருவதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு முதல் ரயில்வே தகவல் திட்ட அமைப்பில் ரயில் பெட்டி பராமரிப்பு மேலாண்மை நிர்வாகப் பிரிவில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இதுவரை கோட்ட ரயில்வே மேலாளராக பணியாற்றிவந்த வி.ஆர். லெனின் தெற்கு ரயில்வே தலைமை அலுவலக போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்