
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த புதன் கிழமை, முன் விரோதம் காரணமாக வேன் ஓட்டுனர் ஆனந்தராஜ் என்பவரை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கணேஷ், மகேந்திரகுமார், சிவகிரி ஆகிய 3 பேரையும் பிடிக்க, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் குற்றவாளிகள் 3 பேரும் தென்காசியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்து, சிவகாசி காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிடிபட்டவர்களையும் சேர்த்து வேன் ஓட்டுனர் கொலை வழக்கில் 8 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.