ஓட்டுனரா தலையாரி யா வட்டாட்சியர் வாகனத்தை இயக்கும் தலையாரி ஓட்டுநர் எங்கே????

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியருக்கு அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வதற்கு அரசு சார்பாக பொலிரோ ஜீப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது அதற்கு வாகனத்தை இயக்குவதற்கு ஓட்டுனர் ஒருவரையும் அரசு நியமித்து உள்ளார்கள் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வட்டாட்சியர் வாகனத்தை ஓட்டுனர் ஓட்டவில்லை எனவும் அதற்கு பதில் திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக தலையாரி வாகனத்தை இயக்குவதாகவும் கிராம நிர்வாக அலுவலகம் செல்லாமல் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும் மேலும் எந்த தாசில்தார் வந்தாலும் இவர்தான் வாகனத்தை இயக்குவதாகவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இவரது தலையீடு அதிக அளவில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்பும் கேள்விகள் அரசு நியமித்த ஜீப் டிரைவர் எங்கே தலையாரி யார் சம்பளம் கொடுக்கிறார் இரட்டை சம்பளம் பெறுகிறார் அரசு வாகனத்தை இயக்குவதற்கு தலையாரி க்கு அனுமதி கொடுத்தது யார் எந்த ஒரு தாசில்தார் வந்தாலும் இவரை இயக்குவதற்கு காரணம் என்ன அனைத்து தாசில்தாருக்கு இவர் வலது கையாக செயல்படுவதாகும் தாசில்தாருக்கு இவர் வாகனத்தை இயக்குவது தெரியாதா ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளர் உரிய நடவடிக்கை எடுக்கபொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம்,மதுரை மாவட்டம்