மதுரை விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தினர் .

மதுரை விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படை (NSG ) கர்னல் சந்தீப் குமார் தலைமையில் 120 அதிரடிப்படை வீரர்கள் . வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய்கள் 4 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் இரவில் கண்டறியும் பைனாகுலர் ஆகியவற்றுடன்குழு தீவிரவாத தாக்குதல் குறித்த ஒத்திகைமதுரை விமான நிலைய இயக்குனர் பாபுராஜ். மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா. துணை ஆணையர் தங்கதுரை. உதவி ஆணையர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற சிறப்பு பாதுகாப்பு பயிற்சி முகாம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தினர் .தேசிய பாதுகாப்பு படை குரூப் கமாண்டர் கர்னல் சந்தீப் குமார் தலைமையில் 120 வீரர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் வெடிகுண்டுகள் கண்டறிய மோப்ப நாய்கள் நான்கு அதிநவீன துப்பாக்கிகள் இரவில் துல்லியமாக பயன்படுத்தும் கருவிகள் மூலம் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் அதனை தடுத்து முறியடிப்பது எப்படி என ஒத்திகை நடைபெற்றது.கடந்த 2008 மும்பை தாக்குதலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது முறியடித்த சம்பவம் போல் தீவிரவாத தாக்குதலை முறியடிக்க ஒத்திகை பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.இதற்காக தேசிய பாதுகாப்பு படை குரூப் கமாண்டர் கர்னல் சந்தீப் குமார் தலைமையில் 120 அதிரடிப்படை வீரர்கள் மதுரை வந்தடைந்தனர்.தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை மதுரை விமான நிலைய வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் அதை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து ஒத்திகை நடைபெறுகிறது.தீவிரவாத தாக்குதலின் போது பணயக்கைதிகளாக உள்ளவர்களை பத்திரமாக மீட்பது மற்றும் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி பிடிப்பது போன்றவை முக்கிய பயிற்சியாக அமையும் என பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகின்றனர்ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கெடுபிடிகள் அதிகமாக நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து தற்பொழுது தீவிரவாத தாக்குதல் தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..