Home செய்திகள் மதுரையில் பழைய ப்ளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மதுரையில் பழைய ப்ளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

by mohan

மதுரை மாவட்டம் விரகனூர் அருகேயுள்ள கோழிமேடு பகுதியில் ஏராளமான ப்ளாஸ்டிக் கழிவ பொருட்கள் சேகரிப்பு குடோன்கள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று நேற்று மாலை 5 மணி அளவில் அதே பகுதியில் செயல்பட்டுவந்த ரமேஷ் மற்றும் அண்ணாதுரை என்பவர்களுக்கு சொந்தமான ப்ளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு குடோனின் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.இதனால் குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ப்ளாஸ்டிக் கழிவுகளும் மலமலவென எரியத்தொடங்கியது. இதனால் கரும்புகை மண்டலம் உருவாகியது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் மற்றும் அனுப்பானடி. நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நுரையை பயன்படுத்தி தீயை சுமார் நான்கு மணி நேரம் அணைத்தனர் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள பழைய பிளாஸ்டிக் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்துப்ளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானம் முழுவதிலும் கரும்புகை எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.ப்ளாஸ்டிக் குடோன்கள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து சிலைமான் போலிசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com