
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாக ஆடி கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி சன்னதி தெருவிலுள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள்வர்.மாலையில் அபிஷேகம், பூஜைகள் முடிந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி முடிந்து கோயில் சென்றடைவார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இன்று முதல் ஆக. 8 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதனால் இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு பக்தர்கள் இன்றி கோவில் உள்ளே உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.