
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கோயில்கள்:மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.