விபத்தில் தாயார் பலி மகன் காயம்.

மதுரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே காலை ஏழு முப்பது மணி அளவில் தன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் திரு நகர் நோக்கி சென்று கொண்டிருந்த விளாச்சேரி முனியாண்டி புரத்தைச் சேர்ந்த ராசாத்தி வயது 45 கணவர் பெயர் பவுன்ராஜ் இவர் தன் மகன் வசந்த் (ஹெல்மெட் அணிந்து இருந்தார் )பல்சர் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த ராசாத்தி திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை வெயிலுகந்த அம்மன் கோவில் அருகே வரும்பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் ஒன்று ராசாத்தி பயணித்த வாகனம் மீது திடீரென்று மோதியது இதில் நிலைகுலைந்த வசந்த் மற்றும் அவரது தாயார் ராசாத்தி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது வசந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்பின்னால் மோதிய வாகனம் நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பரங்குன்றம் 108 அவசரகால உறுதி ராசாத்தியின் உடலைப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர் உடனடியாக திடீர்நகர் போக்குவரத்து போலீசாருக்கு மற்றும் திருப்பரங்குன்றம் காவல்துறைக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர் உடலை கைப்பற்றிய திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு காவலர் பால்பாண்டி போலீசார் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார் இவர் மீது மோதிய வாகனம் எது என்று கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள் ஒரே திசையில் சென்ற இருசக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..