பொதும்பு ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனம் – சோழவந்தான் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் முககவசம் ஆகியவற்றை எம்.எல்.ஏ வெங்கடேசன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தனசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், கென்னடி கண்ணன், சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவி முருகன், பிடிஓ சுந்தரசுவாமி, ஏபிடிஓ சாந்தி, மண்டல துணை வாட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், கூட்டுறவு தலைவர் சரந்தாங்கி முத்தையன், ஊராட்சி ச் செயலாளர் விவேக், இளைஞரணி சந்தானகருப்பு, மாணவரணி பிரதாப் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்