தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும்:

.தமிழகத்தில் ஆரம்பபள்ளிகளை முதலில் திறக்க வேண்டும் என, மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பில் தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாநில செயற்குழு கூட்டம் மதுரை மாவட்ட அளவில் ,மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது .இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் மயில் மற்றும் பொருளாளர் ஜோதி பாபு மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பின்னர், அதன் பொதுச்செயலாளர் மயில் செய்தியாளர் கூறும்போது: தமிழகத்தில் கடந்த 1 1/2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.இதனால், மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரம்ப பள்ளி மாணவர்கள் கல்வியில் மிக மோசமாக உள்ளது. ஆசிரியர் மிகப்பெரிய கல்வியின் மீது மாணவர்களின் மீது கல்வி அக்கறை உள்ளது. ஆரம்பப் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு பரிசீலனை கருத்து தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்றம் முதலில் ஆரம்ப பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். கிராமப்புறத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மாணவர்களின் நெருக்கடி என்பது பெரிய அளவில் கிடையாது. எனவே, மாணவர்கள் கல்வி நலன் கருதி ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எதிர்கால கல்வி நிலை கருதி தமிழகத்தில் ஆரம்ப நிலைப் பள்ளிகள் முதலில் திறக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. அதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள் அதிகாரம் துஷ்பிரயோகம் நடவடிக்கைகளிலும், பழிவாங்கும் நடவடிக்கையில் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டச் செயலாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆகியோரை அந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் தன்னை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் தூண்டுதலின் பேரில் ,தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், தமிழக அரசு மாநிலங்கள் கல்வித்துறையின் தலையிட்டு, அவர்களை தற்காலிக பணி நீக்கத்தை நீக்க வேண்டும் என,இந்த மாநில செயற்குழுக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், தொடர்ந்து தவறான முறைகேடுகள் செயல்களில் ஈடுபடும் வரும் கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தமிழக அரசைக் கூட்டம், கேட்டுக் கொள்கிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion