மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு.

கொரோனா தொற்று பரவலானது அதிவேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையமான இளங்கோ மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில்சமூக நல மருத்துவ உயர் நிலைத்துறை மருத்துவ துறை தலைவர் மருத்துவர். பிரியா, உதவி பேராசிரியர் மருத்துவர்.திருக்குமரன், மருத்துவர்.வசிம்ஷா, உதவி நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் விஜி, செவிலியர் அமுதவள்ளி, நுண்ணறிவு பிரிவு ஐயப்பன் மற்றும் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவல் தடுப்பு உறுதிமொழியான முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், தனி மனித இடை வெளி வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பது போன்ற உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இதே போன்று மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவிலும் கர்ப்பிணி தாய்மார்கள், மருத்துவர்களும் கொரோனா தடுப்பு உறுதி மொழி எடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்