மலையடிப்பட்டி பகுதியில் பால் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் 45த்து மாடுகளை வைத்து பால் பண்ணை ஓன்று நடத்தி வருகிறார்.இங்கு உள்ள மாடுகளுக்காக தீவனத்திற்க்கு வைத்திருந்த வைக்கோல் படப்பிற்க்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர் இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு 2 மணி நேரத்திற்க்கு மேலாக போராடி தீயை அணைத்தனர் .இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம்