
தென்காசி மாவட்ட புதிய இணை இயக்குனர் (நலப்பணிகள்) பதவியேற்பு விழா தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.இதில் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி தென்காசி மாவட்ட புதிய இணை இயக்குனராக மருத்துவர் வெங்கட்ரங்கன் 30.07.21 வெள்ளிக் கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் புதிய இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன் அவர்களை, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பொன்னாடை போர்த்தி வரவேற்றுப் பேசினார். வரவேற்பு நிகழ்ச்சியில் துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர் ராமநாதன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் அருணா, உறைவிட மருத்துவர் அகத்தியன், பல் மருத்துவர் லதா, மருத்துவர் கிருஷ்ணன் மற்றும் தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிகின்ற சுகாதார நல பணியாளர்களுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி (Hepatitis B Vaccine) 31 பேருக்கு போடப்பட்டது. இந்த கல்லீரல் அழற்சி தடுப்பூசி ஆனது 0 மாதம், ஒன்றாவது மாதம், ஆறாவது மாதம் என மூன்று தவணைகளாக தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் அருணா இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன் ஆகியோரின் தலைமையில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிகின்ற சுகாதார நல பணியாளர்களுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி (Hepatitis B Vaccine) 31 பேருக்கு போடப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாமினை சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.