Home செய்திகள் சுரண்டையில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்;உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்குடன் செயல்பட முடிவு..

சுரண்டையில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்;உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்குடன் செயல்பட முடிவு..

by mohan

சுரண்டையில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்குடன் செயல்பட களப்பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் சுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர்சுரண்டை எம். இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தி.மு. இராசேந்திரன் முன்னிலை வகித்தார். சுரண்டை நகர செயலாளர் எஸ்.கே.டி. துரைமுருகள் வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அ. சுப்பையா தொகுத்து வழங்கினார். மாவட்ட மருத்துவ அணி டாக்டர். வி.எஸ். சுப்பாராஜ் தொடக்க உரை நிகழ்த்தினர். வாசுதேவநல்லூர் எம்எல்ஏ‌ டாக்டர். தி. சதன் திருமலைக்குமார் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் காட்டுமன்னார் கோவில் எம்.எஸ். கந்தசாமி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி.நடராசன் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெ.மருதசாமி பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன், மகேஸ்வரன், ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம, உதயசூரியன் தென்காசி வெங்கடேஸ்வரன், சங்கரன்கோவில் ஆறுமுகசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நடுவை சொ. முருகன், மாவட்ட துணை செயலாளர் செ.மோகன்தாஸ், உள்ளிட்ட பலர் பேசினர். பேரூர் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க அரசுக்கு பாராட்டும் கொரோனா‌ தொற்றை கட்டுப்படுத்திய அரசுக்கும், வெற்றிக்கு உழைத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் தி. சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூரி), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு. வழக்கறிஞர் கு. சின்னப்பா (அரியலூரி) மற்றும் டாக்டர். ஏ.ஆர். இரகுராமன் ஆகியோருக்கு பாராட்டும், நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக கூடுதல் இடங்களில் போட்டிடுவதுடன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் 100 விழுக்காடு வெற்றி பெறுவதை உறுதி செய்திடும் வகையில் தேர்தல் களப்பணியினை உடனே தொடங்குவது என்றும் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற கீழ்க்கண்ட இரயில்வே திட்டங்களை நிறைவேற்றித் தருமாறு இந்திய ஒன்றிய அரசையும், இரயில்வே துறையையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இருபெரும் துறைமுகங்களை இணைக்கும் வகையில் தூத்துக்குடி முதல் கொச்சி வரையான நேரடி இரயில் பாதையினை உருவாக்கிட தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை வல்லநாடு திருநெல்வேலி – ஆலங்குளம் பாவூர்சத்திரம் வரை புதிய இரயில் பாதை அமைத்திடவும், திருநெல்வேலி – சேரன்மகாதேவி – அம்பை – கடையம் -பாவூர்சத்திரம் – தென்காசி – கடையநல்லூர் – சங்கரன்கோவில் வழித்தடத்தில் தாமிரபரணி விரைவு ரயில் என்ற பெயரில் தினசரி இரயிலை இயக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட இரயில்வே திட்டங்களை நிறைவேற்றவும், ஆலங்குளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், மானூர் வடக்கு ஆகிய ஒன்றியப் பகுதிகள் பயன்பெறும் வகையில், மேற்கு தொடர்ச்சி மலை நீராதாரத்தைப் பயன்படுத்தியோ, தாமிரபரணி உபரி நீரைப் பயன்படுத்தியோ சாத்தியமான வழிகளில் சிறப்புத் திட்டங்களின் மூலம் நீர்ப்பாசன வசதி செய்திட முன்வருமாறு தமிழக அரசின் நீர்வளத்துறையை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைத்திடவும், மாவட்டத் தலைநகர் தென்காசிக்கு அனைத்து பகுதிகளிலிருந்தும் கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும் வைகோ செயலகம்” என்ற பெயரில் தென்காசி மாவட்டக் கழக அலுவலகம் அமைத்து அதனை கழகப் பொதுச் செயலாளர் வைகோ விரைவில் திறந்து வைக்க உள்ளார் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

செயதியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!