
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் மகேந்திரா வேனை எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு இயக்கி வருகிறார்.கடந்த மார்ச் மாதம் இராமநாதபுரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் அவரை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், புகை சான்றிதழ் இல்லாததால் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.இந்நிலையில், தற்போது சாலை வரி கட்டுவதற்கு மதுரை தெற்கு போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருந்த போது அவருக்கு புகை சான்றிதழ் இல்லாததால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூ.10,600 கட்ட வேண்டுமென அலுவலர்கள் தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.