எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்தாமல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு நல்ல நோக்கத்துடன் தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் – திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பேட்டி.

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கோடு, தடுப்பூசியின் நன்மையினை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்சியாக., மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தொடக்கி வைத்தார்.! தடுப்பூசி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்..!!தொடர்ந்து., முகாமை துவக்கி வைத்து பின்னர் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவதுஅதிமுக அரசு ஆட்சியில் இருக்கும்போதே., திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வலியுறுத்தினோம் எனவும்., நமது கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையினை அமைப்பதற்கு முழு ஆர்வத்துடன் முழு ஈடுபாடுடன் இருப்பதை அறிய முடிகிறது என கூறினார்..! அதே போல்., மாநில அரசானது இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு., மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்..!!தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர்., அதிமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவ கல்லூரி அமைத்து 1500க்கும் மேற்பட்ட மருத்துவபடிப்பு மாணவர்களுக்கு வாய்ப்பளித்தாரோ., அதேபோல் எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறிய அவர்., தமிழக அரசு,எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழி போடாமல் நல்ல நோக்கத்துடன் செயல்பட்டு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைந்திட வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்..!!தொடர்ந்து., அதிமுக அரசு முறையாக அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதற்காக எடப்பாடி பழனிசாமி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்குதமிழகம் முழுவதும் வீட்டில் வாசலில் முகக்கவசங்கள் அணிந்து முறையாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்கு வழக்குபதிவு செய்தது முறையற்றது எனவும்., இது மட்டுமல்லாது இது போன்று ஆயிரம் பொய் வழக்குகள் போட்டாலும் அதனை அதிமுக அரசு சந்திக்கும் எனராஜன் செல்லப்பா கூறினார்..!

!செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்