மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே புதுக்குளம் கண்மாயில் மின் மயானம் அமைக்க தடை கோரிய வழக்கு – ஆட்சியர், நகராட்சி ஆணையர் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவு.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் மின் மயானம் அமைக்க தடை கோரிய வழக்கில் பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.மின்மயனம் அமைப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மனு குறித்து விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. மதுரையை சேர்ந்த சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு, மதுரை கற்பகநகர் சங்கர் நகர் பகுதியி் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உயர் நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்பு, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள மயானங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர. இந்நிலையில் தற்போது மதுரை மாநகராட்சி தனியார் நிதி உதவியுடன் மின் மயானம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் மயானம் அமைக்கும் பகுதியானது புதுக்குளம் கண்ணாய். இதுபோன்று நீர்நிலைகளில் ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. புதுக்குளம் கண்மாய்க்கு உட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானங்கள் கட்டக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளதுஎனவே புதுக்குளம் கண்மாயில் அமைய உள்ள மின்சார மயானம் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இது குறித்து உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்க கூடாது என உத்தரவு உள்ளது.. எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மனு குறித்து விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்