
இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கும் அரசின் தொழிற்சாலைகளை, கார்ப்பரேஷன் ஆக மாற்ற நினைக்கும் மத்திய அரசை எதிர்த்து, மதுரை மேற்கு ரயில்வே நுழைவு வாயில் அருகே எஸ். ஆர். எம். யூ .சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.ஆர்.எம்.யூ. மதுரை கோட்ட செயலர் ரபிக் தலைமை வகித்தார்.உதவி கோட்டச் செயலாளர் ராம்குமார் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.முன்னதாக, பொதுத்துறை நிறுவனங்களை,மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக் கூடாது எனக் கோரி,தொழிற் சங்கத்தினர்,மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.இதில்,ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.