Home செய்திகள் மதுரை திருநகரைச் சேர்ந்த தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு.

மதுரை திருநகரைச் சேர்ந்த தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு.

by mohan

மதுரை திருநகரைச் சோ்ந்த தமிழ் அறிஞா் புலவா் இரா. இளங்குமரனாா்(94) அவரது இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு காலமானாா்.திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927 ஜன.30 ஆம் தேதி பிறந்த இவா் திருநகரில் அரசு பள்ளியில் 1946 ஏப்.8 இல் தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினாா்.சென்னை பல்கலைக்கழகத்தில் 1951 ஆம் ஆண்டு புலவா் தோ்வில் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றாா். பின்னா் நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளாா்.மதுரை அங்கையா்கண்ணி ஆலயத்தில் 1958 இல் குண்டலகேசி எனும் நூலை வெளியிட்டாா்.தொடா்ந்து இவரின் திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு எனும் நூலை 1963 இல் முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டாா்.சங்க இலக்கிய வரிசையில் புரநானூறு எனும் நூலை 2003இல் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டாா்.எங்கும் பொழியும் இன்பத்தமிழ், குண்டலகேசி, திருக்குறள் தமிழ்மரபு என்பது உள்ளிட்ட 500க்கும் மேல்பட்ட நூல்களை இயற்றியுள்ளாா்.மேலும் இவா் திருச்சியை அடுத்த அல்லூா் பகுதியில் திருவள்ளுவா் தவசாலை எனும் தமிழ் ஆராய்ச்சி கூடம் நடத்தி வந்தாா். தமிழகமெங்கும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்குகளில் திருக்குறள் குறித்து சிறப்புரையாற்றியுள்ளாா்.மேலும் இவரது தலைமையில் தமிழ்வழி திருமணங்களும் அதிகளவில் நடத்தி வைத்துள்ளாா்.இவரது தமிழ்சேவையை பாராட்டி மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் தமிழ்செம்மல் விருதும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுமுனைவா் பட்டமும் வழங்கியுள்ளது.மேலும் தமிழகஅரசு திரு.வி.க விருதும் இவருக்கு வழங்கி கௌரவித்தது.இவருக்கு இ.இளங்கோ மற்றும் பாரதி என்ற இரு மகன்களும், கலைமணி, திலகவதி ) ஆகிய இரு மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு நேற்று(திங்கள்கிழமை)மதியம் 3 மணியளவில் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார்மறைவு குறித்து முதல்வர் அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சேகர் ஆகியோர் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்பின்னர்விளாச்சேரியில் உள்ள மயானத்தில் இளங்குமரனார் இறுதி சடங்கில்தமிழக காவல்துறையின் சார்பு ஆய்வாளர் ராஜா பழனிமுத்து குமார் தலைமையில் 8 போலீசார் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்போலீசார் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர்கள் இளங்குமரனார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தகனம் செய்தனர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மதிமுக மதுரை தெற்கு எம்எல்ஏ பூமிநாதன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலளார் கதிரவன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com