
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாடிப்பட்டி வட்டார கிளையின் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒன்றரை இலட்சத்திற்கு ஆன காசோலையை தமிழ்நாடு வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி இடம் முன்னாள் மாநிலத் தலைவர் சகாதேவன் ,வட்டார தலைவர் ராபின்சன் செல்வகுமார், செயலாளர் பாரதி சிங்கம், பொருளாளர் ராஜபாண்டியன், ராஜசேகரன், தமிழ்ச்செல்வன் ,பீட்டர், திவாகர், பரமேஸ்வரன், பால்பாண்டி, அண்ணாதுரை ஆகியோர் வழங்கினார்கள் .மதுரை மேற்கு வட்டாரத்தின் சார்பாக ரூபாய் 50 ஆயிரத்திற்கு ஆன காசோலையை ஜெபத்துரை ,செல்வ குமரேசன், உதயகுமார், தட்சிணாமூர்த்தி ,ஜேக்கப் ,ஆகியோர் வழங்கினார்கள். மேலூர் வட்டார கிளையின் சார்பாக 34 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கள்ளிக்குடி ஆறுமுகம், திருமங்கலம் பாண்டி ,தேவதாஸ் காந்தி ,கதிரேசன் ,மேலூர் தேவகி, கிறிஸ்டோபர், கணபதி சீதாலட்சுமி ஆகியோர் வழங்கினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.