
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை அலுவலகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுப்பிரமணியபுரம், மாநகராட்சி சுகாதார ஊழியர் காலனி இடத்தினை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், ஒப்படைப்பு செய்தார்.மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.87 சுப்பிரமணியபுரம் மாநகராட்சி சுகாதார ஊழியர் காலனி, சர்வே வார்டு எண்.4 பிளாக் எண்.39 டி.எஸ்.நம்பர்.21ல் மீதியுள்ள வடபுறம் 1 ஏக்கர் 30 சென்ட் பரப்பளவு கொண்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அங்கு நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் துய்மைப் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ,அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்காக குடிசை மாற்று வாரியத்தின் அலுவலர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஒப்படைப்பு செய்து உள்ளார். 18.02.2011 அன்று அரசால் ஆணை வழங்கப்பட்ட இவ்வினம், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இதற்கு தற்போது, தீர்வு காணப்பட்டு இடம், ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்ச்சியில், துணை ஆணையாளர்சங்கீதா, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், கே.கே.நகர் மதுரை நிர்வாகப்பொறியாளர்முனியசாமி, உதவிப்பொறியாளர்சுதா ஆகியோர் உடன் உள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.