
மதுரை மாவட்டம் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாஸ்கரன் ஏற்பாட்டின்படி, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 10 நாள்கள்
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ,கல்லூரி மைதானத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியின் நிறைவு நாள் இன்று,கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் உடல்தகுதி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தேசிய மாணவர் படை பேராசிரியர் கேப்டன்இராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் சீனிமுருகன், மற்றும் சோழவந்தான் காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து, காவலர் உடல் தகுதி தேர்வுக்கு தயார் படுத்துவதற்கான பயிற்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஓட்டப்பயிற்சி, நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகிய பயிற்சி அளித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.