விடுதலைப் போராட்ட வீரர் என் சங்கரையா நூறாவது பிறந்த நாள் விழா.

விடுதலைப் போராட்ட வீரரும் பொதுவுடமை இயக்கத்தின் போராளியுமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் என் சங்கர் ஐயாவின் நூறாவது பிறந்த நாள் விழா ராஜபாளையம் நகரில் பல்வேறு இடங்களில் கேக் வெட்டியும் இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.சம்பந்தம் சீதக்காதி தெருவில் பால மஸ்தான் பொன்விழா மைதானத்தில் கிருஷ்ணன் சோழ ராஜபட்டியில் செல்வராஜ், இந்திரா காலனி செல்லமுத்து லீலாவதி நகரில் கதிரேசன் 42 வது வார்டில் பொன்னுச்சாமி எம்ஜிஆர் நகரில் செந்தமிழ்ச்செல்வன் சிதம்பரனார் தெருவில் குருநாதன் தொழிலாளர் சங்கம் சார்பில் தங்கவேல் மாற்றுத்திறனாளி சங்கத்தில் சரவணன் கூட்டுறவு தொழிலாளர் சங்கத்தில் கணேசன் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் முத்தையா சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் செல்லப்பாண்டி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ராஜேந்திரன் ஆகியோரின் தலைமையிலும் காந்தி சிலை அருகில் நபர் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நந்தன் கனகராஜ் தலைமையிலும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.தோழர் சங்கர் ஐயாவின் குடும்ப உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட உறுப்பினர் ராஜேஸ்வரி அவர்களின் இல்லத்தில் அவரது தலைமையில்கேக் வெட்டி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது குடும்ப உறுப்பினர்களும் 42 வது வார்டு கட்சிகளை தோழர்களும் பங்கேற்றனர்.கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன்,பிரசாந்த் நகரச் செயலாளர் மாரியப்பன் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் பன்னீர்செல்வம் சிவஞானம் மாதர் சங்க நகர தலைவர் மைதிலி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்