ஈச்சனேரி பகுதியிலுள்ள கிணற்றில் இரண்டு நாட்களுக்கு மேலாக மிதந்த ஆண் உடல், போலீசார் விசாரணை .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட மண்டேலா நகரை அடுத்த ஈச்சனேரி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தவர் பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார் அந்த உடல் நீரில் மூழ்கி உயிரிழந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக இருக்கும் என்பதும்.மேலும் இறந்தவர் அவனியாபுரம் அடுத்த வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த பன்னீர் என்பவரின் மகன் சுரேஷ்(41) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கிணற்றுக்கு அருகே மது பாட்டில்கள் இருந்ததாலும், இறந்தவர் உடையுடன் தண்ணீரில் கிடந்ததால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தண்ணீரில் வீசப்பட்டாரா..? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்