Home செய்திகள் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு; முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் H.ராஜா மனு .

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு; முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் H.ராஜா மனு .

by mohan

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் H.ராஜா மனு தாக்கல் செய்துள்ளார்.தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் கண்ணன் எதிர்ப்பு தெரிவித்து முன் ஜாமீன் எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறியதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் நான் உட்பட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு.தற்போது இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த குற்ற பத்திரிக்கையில் என்னை தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது.. எனவே இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமின் வழங்க வேண்டும் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது எச் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்து விட்டது எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் இந்த வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க எங்களது தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் இதற்கான எதிர்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவே தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்..இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கில் எதிர்மனுதாரர் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!