உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்துப்பாண்டிபட்டி கிராமத்தில் பசுமை உரம் மேலாண்மை திட்டத்தின் மூலம் காய்கறி கழிவு மாட்டுச்சாணகழிவு, கோழி கழிவுகளில் புதுப்பிக்கப்பட்ட எரிவாயு தயாரிக்கும் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்; சேகர் ஆய்வு செய்தார். மேலும் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் குப்பைகளை தரம்பிரித்து இயற்கை உரமாக மாற்றும் பணிகள், மின்மயானம், சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் உசிலம்பட்டி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வருகைபதிவேடு, கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளையும் ஆய்வு செய்தார். இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் வட்டாட்சியர் விஜயலட்சுமி உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல், பசுமை உரம் மேலாண்மை திட்டம் தொழில்நுட்ப அலுவலர் பாலமுருகன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்குமார், நகராட்சி சுகாதாரஆய்வாளர்கள் அகமதுகபிர், சரவணபிரபு, உள்ளிட்ட ஊராட்சி, நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உசிலைசிந்தனியா