தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அனுப்பானடி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சீல்டு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்,

தமிழ் நாடு பள்ளி கல்வி துறை சார்பாக எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பர் அல்லது பிப்பரவரி மாதம் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும், அவ்வகையில் கடந்த பிப்பரவரி மாதம் தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது, இத் தேர்வு MAT மற்றும் SAT என இரு பிரிவாக 180 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது, இந்த 180 மதிப்பெண்களில் 35 சதவிதம் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மூலம் நான்கு ஆண்டு காலம் அவர்களுடைய உயர் பள்ளி படிப்பிற்க்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும், அவ்வகையில் இந்தாண்டு நடைப்பெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் மதுரை மாவட்டத்தில் இருந்து 3360 மாணவர்கள் தேர்வுக்கு தகுதி பெற்று தேர்வு எழுதினார்கள், அதில் 269 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், அதில் 11 மாணவர்கள் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர், அதில் அனுப்பானடி மாநகராட்சி பள்ளியில் படிக்கும் செல்வ வேல் மற்றும் தனலெட்சுமி என்ற இரண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், அனுப்பானடி பவர் பாய்ஸ் நற்பணி மன்றம் மற்றும் வ.உ.சி திருக்கண் குழு சார்பாக சமூக ஆர்வலர் அண்ணா முருகானந்தம், ஜோதி லெட்சுமி ஆகியோர் தலைமையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற செல்வவேல் மற்றும் தனலெட்சுமி ஆகிய மாணவர்களுக்கு சீல்டு வழங்கி கெளரவிக்கப்பட்டது, இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் குரு ராஜ், நேயா யோகேஷ் , மோகன் , சதிஷ், நடராஜன், துலாம் சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்