
மதுரை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர், உடல் தகுதி தேர்விற்கான பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், மதுரை ஆயுதப்படை மைதானம், மேலூர், திருமங்கலம், திருவேடகம், உசிலம்பட்டி, சோழவந்தான், பேரையூர், உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறை பயிற்சியாளர்களைக் கொண்டு 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10 நாட்களுக்கு உடல் தகுதி தேர்விற்கான சிறப்பான பயிற்சி அளிக்க உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மேலூரில் காவலர்களுக்கான உடல் தேர்வுக்கான பயிற்சி மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில், மேலூர் சரக காவல்த்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் தொடங்கி வைத்தார், இந்த பயிற்சியில் 23 பேர் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களுக்கு கயறு ஏறுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பயிற்சியாளர் தீபன் சக்ரவர்த்தி வழங்கினார், மேலும் மேலூர் காவல்த்துறை ஆய்வாளர் சார்லஸ் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்
..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.