
மதுரை பி.பி.குளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை இடிக்கப்பட்டன.மதுரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்து வருகின்றன.மதுரை மீனாட்சிபுரம், வைகை வடகரை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த வீடுகள், கடைகளை மதுரை மாநகராட்சி அலுவலர்கள், இயந்திரம் மூலம் அகற்றினர்.பொதுமக்கள் இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினாலும், அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.மதுரை பி.பி.குளம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 581 வீடுகளை இன்று இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.இதனால், அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இந்த வேளையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள், மதுரை நகரில் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், விரைவில் அகற்ற ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.