
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் ஆரம்பம். அதற்காக மாணவ, மாணவியர் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது .காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தியில் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பருவமுறை, அப்பருவ முறையில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2020 நவம்பருக்கான தேர்வுகள் அனைத்தும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது, தற்போது அதற்கான தேர்வுகள் வருகிற 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.தொலைநிலை கல்வி பருவ தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.