
மாவட்ட ஆட்சியரை அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மற்றும் சமூக ஆர்வலர் அசோக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.தங்கள் மனு குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்: “தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த ஆட்சியர் தலைமையில் ஆறு பேர் கொண்ட பசுமை குழு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமை குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக வழங்கப்பட்டது.அந்த குழுவில் பசுமை பணி மற்றும் இயற்கை நலன் சார்ந்த தகுதி வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் தொடர் பசுமை பணி மற்றும் மரங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆர்வலர்களையும் உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்துவதோடு ஏற்கனவே வளர்ந்து பயன்தரும் மரங்களை பாதுகாக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்த வேண்டும்.உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மரங்கள் இடையூராக இருக்கும் பட்சத்தில் அவற்றை வேரோடு எடுத்து மாற்று இடத்தில் பாதுகாப்பாக நடவு செய்யும் வகையில் நவீன இயந்திர வண்டிகள் வாங்கப்பட வேண்டும்..மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்கீழ் வைகைநதி கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அருகே நான்கு மாசிவீதி சாலைகளிலும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வழிவகை செய்ய வேண்டும்.மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் அமைக்கப்படும் பசுமை குழுவின் செயல்திட்டத்தில் இனைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது” என்றார்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.