வேலன் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை யூனியன் சேர்மன் நடுப்பட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலாயுதபுரம் அருகே வேலன் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து இந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தார் சாலையை யூனியன் சேர்மன் சிங்கராஜ் சேர்மன் கற்பகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தார் சாலையை ரிப்பன் வெட்டி யூனியன் சேர்மன் சிங்கராஜ் திறந்துவைத்தார் இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் வாறுகால் வசதி ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சேர்மன் விரைவில் இந்த பணிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார் இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்