அழகர்கோவிலுக்கு காஞ்சரம்பேட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு.

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி, என்று போற்றி அமைக்கப்படும் நூற்றி எட்டு வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலுக்கு, மதுரை பெரியார் நிலையம், வாடிப்பட்டி, மேலூர், மற்றும் நத்தம் வழியாக அரசு டவுன் பஸ்கள் பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது.ஆனால், பெரியார் நிலையத்திலிருந்து ஊமச்சிகுளம், காஞ்சரம்பேட்டை, சத்திரப்பட்டி, வழியாக அழகர்கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை டவுன் பஸ் தினமும் 6 முறை இயக்கப்பட்டு வந்தது.ஆனால், தற்போது நிலவரப்படி ஒரு முறை கூட இந்த பஸ் வரவில்லை. இந்தப் பகுதியை சேர்ந்த அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் மாற்று வழியாக சென்று தான் அழகர்கோவிலுக்கு செல்ல வேண்டும். மேலும், இப்பகுதியை சேர்ந்தவர்கள் பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். தற்போது, நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்கள் அத்தனையும் இயக்கப்பட்டு வருகிறது.இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், இந்த காஞ்சரம்பேட்டை வழியாக இயங்கிய அழகர்கோவில் பஸ் மட்டும் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நெல் உள்ளிட்ட தானியங்களை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவதற்கு மாற்றுவழி ஏற்படுத்தித்தான் சென்று வருகின்றனர். எனவே, மீண்டும் நிறுத்தப்பட்ட அழகர்கோவில் டவுன் பஸ்சை மறுபடியும் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம், பெரியார் நிலையத்திலிருந்து புதூர், கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, வழியாக அழகர்கோவிலுக்கு தினமும் 20 முறைக்கு மேலாக டவுன் பஸ் தற்போது சென்று வருகிறது.முன்பு வந்தது போல், 6 முறை நேரத்திற்கு காஞ்சரம்பேட்டை வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா? என்று இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பலரும் ஆர்வத்தில் உள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..