கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் சிலம்பாட்டம் மற்றும் கும்மிப்பாட்டு கலைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ண கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் முத்துலட்சுமி ஆகியோர் நாட்டுப்புற கலைஞர் 20 ஆண்டு காலமாக இவர்கள் இருவரும் தான் கற்ற கலைகளை கிராமத்திலுள்ள இளைஞர் மற்றும் பெண்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர் தற்போது ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதித்து உள்ளதாக கூறுகின்றனர் தங்களது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் கொரோணா விழிப்புணர்வு நிகழ்ச்சியை கிராம பொது மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது தேவையானபோது முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அவ்வப்போது சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் உட்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்இதுகுறித்து ராஜாங்கம் கூறும்போது சிறு வயதில் இருந்தே சிலம்பாட்டத்தில் ஆர்வம் காட்டி பல்வேறு வித்தைகளை கற்றுக் கொண்டேன் நான் கற்றுக்கொண்ட வித்தைகளை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளும் கிராமங்களில் நடக்கக்கூடிய திருவிழாவிலும் எங்களது நிகழ்ச்சி நடைபெறும் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாமல் உள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஆகையால் அரசு எங்களுக்கு மாதம் 10,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்இதேபோல் முத்துலட்சுமி கூறும்பொழுது சுமார் 20 பெண்கள் கும்மிப்பாட்டு நாட்டுப்புறப் பாடல்களை திருவிழா நிகழ்ச்சிகளில் முளைப்பாரி வைத்து கும்மியடித்து நடத்தி வந்தோம் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது அரசு எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்