
சிவகங்கை காஞ்சிரங்கால் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கொரானா நோய்த்தொற்று தடுப்புக்கான தடுப்பூசி முகாம் காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை . அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் துவக்கி வைத்தனர். பின்னர் ஒருநாள் நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் அதிகம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தெரிவித்தார். இதனை குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையம், கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து மக்களின் இல்லங்களை தேடி ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு அவர்களின் இல்லம் தேடி சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார். இத்திட்டம் தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளில் நிறைவேறும் என்ற நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், இத்திட்டம் நிறைவு பெற்றவுடன் மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் இறப்பு சதவீதம் பாதியாகக் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இத்திட்டனால் தமிழகத்தைத் உலக மக்கள் திரும்பிப் பார்க்கக் கூடிய நிலை ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.