மதுரையில் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தியதால் தொற்று குறைந்துள்ளது: அமைச்சர்:

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்தியதால் தொற்று குறைந்துள்ளது என, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறினார்.மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மகப்பூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்களை, அவர் புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியது :தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால்,கொரோனா தொற்று குறைந்துள்ளது.மதுரையில் பல்வேறு. வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். என்னதான் அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றியடை முடியும்.அரசானது, மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் பொறுப்பு சையத் முஸ்தபா, நகர் நல அலுவலர் குருபரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்