கொரானா இல்லாத கிடாரிபட்டி ஊராட்சி – ஊராட்சி மன்ற தலைவர்க்கு குவியும் பாராட்டுக்கள்

கொரானா பெருந்தொற்றை ஒழிக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்தவகையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கிடாரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதாமதிவாணன் சிறப்பான நிர்வாகத்தின் அடிப்படையில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சி முழுவதும் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி பிளிச்சிங் பவுடர் மூலம் சுத்தமாகவும் கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கபட்டு கொரானா பாசிட்டிவ் இல்லாத கிராமமாக மாறியுள்ளது. மேலும் குடிநீர் வசதி சாலை வசதி,ரேசன் கடை உள்ளிட்ட கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி உள்ளது.கிடாரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதாமதிவாணன் க்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்