Home செய்திகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக நிர்வாக குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக நிர்வாக குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

by mohan

மதுரை .விருதுநகர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழுவினர் எய்ம்ஸ் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் உள்ள மதுரை நாடாளும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது .இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சுகாதார துறை அமைச்சருக்கு அளித்துள்ள கடிதத்தின் பதிலாக வரும் 16ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.இதில் ஜிம்பர் மருத்துவமனை இயக்குநரும் எய்மஸ் மருத்துவமனை தலைவருமான கட்டோச்சி தலைமையில் மத்திய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இணைச் செயலாளர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் மருத்துவ வல்லுனர்கள் விருதுநகர், மதுரை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட குழுவினர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதுஇதில் எய்ம்ஸ் மருத்துவமனை காண திட்டங்கள் புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்குவது ஜப்பான் நிறுவனமான ஜமைக்கா முதலீடுகள் குறித்து விரிவாக கலந்தாலோசனை செய்ய உள்ளோம்.எய்ம்ஸ மருத்துவமனைக்கான தமிழக அரசு நிலம் ஒதுக்கியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலங்களை மத்திய அரசிடம் அளித்துள்ளது.அதேபோல் நிதி ஆதாரங்கள் மத்திய அரசு நேரடியாக பட்ஜெட் மூலம் ஒதுக்காமல் பாராளுமன்ற விதிகளின்படி தன்னாட்சி அமைப்பின் மூலம் கடன் பெற்று செயல்பட உள்ளதுஇதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கான நிதி நிலை ஆதாரங்கள் பாராளு மன்ற குழுவிடம் வராதுதனிப்பட்ட முறையில் ஜப்பானின் நிறுவனம் மூலம் நிதி ஆதாரங்கள் பெறப்படுவதால் அது குறித்து நிர்வாக குழு கூட்டம் முடிந்த பின்புதான் தகவல் தெரிவிக்க முடியும்மேலும் நடப்பு ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கினால் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப பூர்வாங்க பணிகள் துவங்குவதில் அக்கறை செலுத்த முடியும்மாணவர்கள் சேர்க்கையுடன் மாணவர்கள் தங்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் துவங்கப்பட்டது.மாநில அரசு சரியான முறை ஒத்துழைப்பு தராததால் பணிகள் செயல்படவில்லை.மாநில அமைச்சர்கள் முன்னெடுத்து 15 நாட்களுக்குள் பணிகள் செயல்படுத்த தீவிரம் காட்டியுள்ளனர் மதுரை விமான நிலையத்திற்கான இடம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் வாரணாசி பெங்களூரு போல் அண்டர் பாஸ் முறையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எந்த ஒரு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் நிலம் . அதை மட்டும் உறுதி செய்தால் மதுரை விமான நிலைம் மட்டுமல்ல எய்ம்ஸ் உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் முக்கிய தீர்வு கிடைக்கும்.நிலம் உறுதி செய்யப்பட்ட பின்பு பணிகள் துவங்கப்படும் என விருதுநகர் நாடாளு மன்ற உறுப்பினர். மாணிக்க தாகூர் M.P கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com