
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தனது தாயை இரண்டு மணி நேரத்திற்கும் காக்க வைத்ததாக சுந்தர்ராஜன் என்பவர்., திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் செல்வராஜ் மீது மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறையினரிடம் புகார் அளித்தார். இந்நிலையில்.,புகாரின் அடிப்படையில் மாவட்ட மருத்துவ ஊரக நலத்துறை இணை இயக்குனர் வெங்கடாச்சலம் தலைமையில் 5க்கும் மேற்பட்ட சுகாதாரத்துரையினர் இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக தலைமை மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையை முடித்து விட்டு செய்தியாளர்களிடம் இணை இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவதுதிருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வந்த புகாரினையடுத்து., அவரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் ஆவணங்களை சரிபார்த்து வருவதாகவும் கூறிய அவர்., விசாரணை முழுமையாக முடித்த பின்னரே குற்றச்சாட்டை நிரூபிக்க முடியும் என கூறினார்….. இதற்கிடையே அப்பகுதி மக்கள் கூறுகையில்.. திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது எனவும் இங்கு சிறப்பான மருத்துவம் கிடைப்பதாகவும் கொரொண காலகட்டங்களில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டது எனவும் சாதாரண நாட்களில் வரும் நோயாளிகளை கனிவுடனும் கவனிக்கும் மருத்துவர்கள் எந்த ஒரு நோயாளிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என நோக்கத்தில் தலைமை மருத்துவரை நேரடியாக ஒவ்வொரு நோயாளியும் பரிசோதித்து அதற்கான தீர்வையும் அளித்து வந்தார் என அங்கு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர் அவர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் ஏதோ உள்நோக்கத்துடன் வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.