Home செய்திகள் சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் மழை சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெற்கதிர்கள் சேதம் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை :

சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் மழை சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெற்கதிர்கள் சேதம் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை :

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான், ரிஷபம், இரும்பாடி, தேனூர், தோடனரி, கள்ளிக்குடி, சமயநல்லூர் உட்பட இப் பகுதியில் இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல பெய்த மழையால், இப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதேபோல், அபிவிருத்தி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதுதேனூர் விவசாயி சுரேஷ்கூறும்போது,சுமார் 10 ஏக்கர் நிலத்தில் இந்த கனமழையால் தண்ணீர் சூழ்ந்து விளைந்த நெற்கதிர்கள் நீரில் சாய்ந்துள்ளது. இதனால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.ரிஷபம் பழனியப்பன் கூறும்போது ,எனது தோட்டத்தில் 300 வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்துள்ளது பெய்த கன மழையில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்று பகுதியில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் உள்ள தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதேபோல், இப்பகுதியில் சமயநல்லூர், தோடனரி, கள்ளிகுடி, ஆகிய பகுதிகளில் கோடையில் பயிரிட்ட நெற்கதிர்கள் இந்த கனமழைக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் .ஏற்கனவே, ஊரடங்கு உத்தரவால், வாழை இலை வாழை காய் வாழை பழங்கள் விற்பனை இல்லாமல் மரத்தில் வாழைப் பழங்கள் பழுத்து அழுகிய நிலையில் சேதமடைந்து விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர்.இந்த நேரத்தில் மீதி இருந்த வாழை மரங்களில் வாழைக்காய் பலத்த காற்று வீசியதால் வாழைக்காய்கள் சேதமடைந்துள்ளது.இதற்கு முன்னால் ஏற்பட்ட பாதிப்பிற்கும் அரசு நிவாரணம் வழங்கவில்லை என்றும், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com