காஞ்சி ஸ்ரீ சரஸ்வதி அம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி பேருந்து நிலையம் அருகில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரி சஞ்சீவி வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி சமேத ஸ்ரீ குபேர பெருமாள் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் மூர்த்திகளுக்கு முதலாமாண்டு மண்டலாபிஷேகம் மற்றும் சரஸ்வதி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் அருள்வாக்கு செம்மல் எஸ் முல்லை அம்மாள் ஸ்ரீ சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் அருள்வாக்கு நிலையம் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் ஊன்றும் வைபவத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து கணபதி பூஜை, கும்ப அபிஷேகம், மகாலட்சுமி பூஜை, வாஸ்து பூஜை, பஞ்சகவ்ய பூஜை, நவகிரக ஹோமம், மூர்த்தி ஹோமம், கந்த ஹோமம், அக்னி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டது. யாகசாலை பூஜைகள் துவங்கின. கும்பாபிஷேக காலை கலச பூஜைகள் நடத்தப்பட்டு, புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வில் த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி, காஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தகோடிகள் திரளாக கலந்து கொண்டு இறைவனின் திருவருளைப் பெற்றனர்