
மதுரை மாவட்டம்மேலூர் அருகே மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி தனியார் பள்ளி அருகாமையில் திருச்சியிலிருந்து மதுரைக்கு சிமெண்டு லோடு ஏற்றி சென் ற டாரஸ் லாரி நள்ளிரவு 1 மணியளவில் டயர் வெடித்த நிலையில் பழுதாகி சாலை யோரமாக நின்றது, அதன் ஓட்டுநர் திரு வண்ணாமலை கலசபாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (28) வயது என்பவர் பழுதான டய ரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தா ர்,லாரியின் அருகே நெடுஞ்சாலை ரோந் து வாகன காவலர்கள் எச்சரிக்கை விளக் கை காண்பித்து போக்குவரத்தை ஒழு ங்கு படுத்தி கொண்டிருந்துள்ளனர்,இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்துகொண்டிருந்த அர சு விரைவு பேருந்து சற்றும் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் மோதியது இதில் பேருந்தின் முன் பகுதி முழுமை யாக நொறுங்கி சேதமடைந்தது இந்த இடிபாடுகளில் திருவள்ளூர் மாவட்டம் பெருமெட்டு என்ற பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பாலமுருகன்(45) வயது என்பவர் சிக்கி கொண்டு வெளியில் வரமுடியாமல் வேதனையில் துடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்,இதுகுறித்து தகவலையடுத்து டிஎஸ்பி பிரபாகரன் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர், மேலும் நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலை மையில் பொண்ணான்டி, உள்ளிட்ட தீயணைப்பு வீரர்களும் வந்து ஓட்டுநரை மீட்கும் முயற் சியில் ஈடுபட்டனர்,சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பேருந்து ஓட்டுநர் பாலமுருகன் இரண்டுகால் களும் முறிந்த நிலையில் பலத்த காய ங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்சு வாகனம் மூலமாக சிகிச்சை க்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்,மேலும் பேருந் தில் வந்த 10 பயணிகள் சிறிய காயமடை ந்தனர்,அவர்கள் அனைவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றனர்,லாரி ஓட் டுநர் மணிகண்டனும் பலத்த காயமடைந்தார், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.