மதுரை ரயில்வே நடைபாதை கட்டணம் 50 ரூபாயா? மதுரை – விருதுநகர் பயணக்கட்டணம் 30 ரூபாய் தானே. புருவம் உயர்த்தும் சாமானியர்கள்.

நாடுமுழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்த நிலையில்,அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் உடன் வருபர்கள் உள்ளிட்டோரால் ஏற்படும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ரயில்வே நடைபாதை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பயணிகள் வரத்து குறைந்ததை தொடர்ந்து சிறப்பு ரயில்களின் இயக்கமும் குறைக்கப்பட்டது.இந்தநிலையில் இரண்டாம் அலை பரவல் குறைந்து வருவதையடுத்து பயணிகள் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது வரையில் மதுரை ரயில் நிலையத்தில் நடைபாதை கட்டணம் 50ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக மதுரை – விருதுநகருக்கான ரயில்பயண கட்டணம் 30 ரூபாய் என்றுள்ள நிலையில், நடைபாதை கட்டணம் 50ரூபாய் வசூலிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்