இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது .

இதயம் அறக்கட்டளை மூலம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சிவக்குமார், நிர்வாகி மாதர்ஷா ஆகியோர் தனிப்படை காவல்துறையினர் போடி மெட்டு பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர். காப்பக நிர்வாகிகள், குழந்தைகளை விற்றவர்கள், வாங்கியவர்கள், இடைத்தரகர்கள் என ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாதர்ஷா ஆகியோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு மதுரை கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றம் உட்படுத்தி பின்னர் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறை என திட்டமிட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்