தமிழக அரசு கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுத்துள்ளது வருவாய்த்துறை அமைச்சர் பேட்டி .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்பி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 200 படுக்கைகள் இருந்தாலும் ஆட்சியின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 80 லட்சம் செலவில் 50. லிட்டர் முதல் 60 வரை உயிர்சக்தி ஆக்சிசன் உற்பத்தி இந்திரத்தை ACT GRANTS ஆக்ட்கிராண்ட்ஸ் நீறுவனம் மற்றும் CLEANMAX ENERGY PVT .LTD .க்ளின்மேக்ஸ் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் தனியார் நிருவன பிரதிநிதி என்.ஜே. அக்.க்ஷா ராஜா நோயாளிகள் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளார் அதனை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது நோய்த் தொற்றில் இராஜபாளையத்தில் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற ஏற்பாடுகள் செய்து வருகிறோம் இராஜபாளையம் மட்டுமல்ல விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் அருப்புக்கோட்டை சாத்தூர் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களின் நலனுக்காக அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளது என பேசினார்மேலும் இராஜபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சரிவர தண்ணீர் இல்லாமல் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக பத்திரிகையாளர் கேள்விக்கு .விரைவில் ஒரு மாத காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தண்ணீர் கிடைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார் .இதேபோல் இந்த பகுதியில் மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய் செய்வதற்காக இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார் மூன்றாவது அலை வராது வந்தால் குழந்தைகளை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M. குமார். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ். மற்றும் மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபுஜி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..