Home செய்திகள் சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நீண்டகால கோரிக்கை ஏற்பு தமிழக அரசுக்கு விவசாயிகள் பாராட்டு:

சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நீண்டகால கோரிக்கை ஏற்பு தமிழக அரசுக்கு விவசாயிகள் பாராட்டு:

by mohan

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,சோழவந்தான் பகுதியில் நீண்ட கால கோரிக்கையாக விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க உடனடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரையும் விவசாயிகள் பாராட்டினர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தென்கரை, முள்ளிப்பள்ளம், ஊத்துக்குளி , ரிஷபம் , நாராயணபுரம், மேலக்கால், குருவித்துறை, மன்னாடிமங்கலம், காடுபட்டி, இரும்பாடி, கருப்பட்டி, திருவேடகம் உட்பட 50 கிராம விவசாயிகளின் பிரதான நம்பிக்கையான தொழில் விவசாயமே. இப் பகுதியில், ஆடுதுறை 45, சின்னப்பொண்ணு, கல்சர் அண்ணன், மாப்பிள்ளை சம்பா, போன்ற புதிய வகை குறுகிய கால நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு தொழில் செய்து வருகின்றனர். கிணற்றுப் பாசனத்தில் நெல் நாற்றங்கால் பயிர் செய்ய துவங்கி இருக்கின்றனர். பருவமழையையோட்டி, பெரியாறு அணை வைகை அணைகளில் தண்ணீர் நிரம்பி திறப்பதை ஒட்டி கண்மாய் குளங்கள் நிரம்பும் அதனை வைத்து விவசாயிகள் சுமார் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் நாற்று நட்டு விளைச்சல் செய்கின்றனர்.120 நாளில் நெற்கதிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் இடைத்தரகர்கள் வியாபாரிகளால் அடிமாட்டு விலைக்கு நெல்லை போடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் , வங்கிகள் மற்றும் பத்து வட்டிக்கு கூடுதலாக கடன் வாங்கி அடைக்க முடியாத அவல நிலையில் விவசாயிகள் வேதனையில் கண்ணீரில் மூழ்குகின்றனர். விவசாயிகள் கவலை போக்க சோழவந்தான் தென்கரை பகுதி விவசாய நிலங்களை சுற்றி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி வலியுறுத்தினர். வைகை மற்றும் பேரனை பாசன கால்வாய் பகிர்மான விவசாய சங்கத் தலைவர் வக்கீல் முருகன் நிர்வாகி ஊத்துக்குளி ராஜாராம் மற்றும் உறுப்பினர்கள் முயற்சியால் வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடமும் முதல்வர்ஸ்டாலின் இடமும், விவசாய சங்கத்தினர் இடமும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை முன்வைத்தனர். கோரிக்கையை தொடர்ந்து, தென்கரை பகுதியில் உடனடி நிலையம் அமைக்க தமிழகமுதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி நடவடிக்கை எடுத்தனர் .விவசாயிகள், திருப்பதி லட்சுமணன், செல்வமணி ஆகியோர் கூறுகையில்: சோழவந்தான் தென்கரை கண்மாய் பாசன விவசாயிகள் சுமார் 4,000 ஏக்கர் நிலத்திற்கு மேல் நெற்பயிர் இட்டுள்ளோம். அறுவடைக்கு பின், நெல் தரகர்களிடம் வியாபாரிகளிடமும் ஒரு மூடை 65 கிலோ கொண்டது ரூபாய் 750 அடிமாட்டு விலைக்கு போட வேண்டிய துர்ப்பாக்கிய அவலம் ஏற்படுகிறது.வங்கி மற்றும் கந்து வட்டிக்கு மேலும் கடனை கூட கட்ட முடியாத நிலையில் அவதிப்படுகிறோம் .ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் நடுநிலையோடு ரூபாய் 19.60காசு 40 கிலோ எடை கொண்டது ஒரு சிப்பம் இந்த விலையில் கூடுதல் லாபம் கிடைக்கும் கடன்இன்றி குடும்பம் நிம்மதியாக வாழலாம். ஆகவே, நீண்ட காலமாக விவசாய சங்கத்திடம் வேதனையில் கூற சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வர் அமைச்சர் மூர்த்தி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தி விவசாயிகளின் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவிய முதல்வர் அமைச்சர் மற்றும் விவசாய சங்கத்தினறுக்கு விவசாயிகள் நன்றி பாராட்டுகின்றோம் என்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com