Home செய்திகள் திமுக இன்றைக்கு தவறான உறுதிமொழிகளை கொடுத்து, பொறியில் சிக்கிய எலி போல் இன்றைக்கு திமுக , திருப்பரங்குன்ற MLA பேட்டி.

திமுக இன்றைக்கு தவறான உறுதிமொழிகளை கொடுத்து, பொறியில் சிக்கிய எலி போல் இன்றைக்கு திமுக , திருப்பரங்குன்ற MLA பேட்டி.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிரிவலம் பாதையில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானமாக சசிகலாவுடன் தொடர்பு கொள்ளும் அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், அவரை தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஓபிஎஸ், இபிஎஸ் வழி நடக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில்.அதிமுக தலைமைக்கு அடையாளம் தேவையில்லை, அதிமுக ஆட்சி உயரப்பறக்கும் என்பார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்க கூடிய இயக்கம். சசிகலா அவர்கள் உங்களுக்கு பேசினால் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. அவருடன் செல்ல யாரும் தயாராக இல்லை என்றார்.திமுக இன்றைக்கு தவறான உறுதிமொழிகளை கொடுத்து நீட்தேர்வு நீக்க முடியாமல், 7 பேரை விடுதலை செய்ய முடியாமல், கர்நாடக மேகதாது அணையை கட்டுவதற்கான நிலைமை உருவாகியிருக்கிற நிலையை தடுக்க முடியாமல் நல்ல பொறியில் சிக்கிய எலி போல் இன்றைக்கு திமுக இருக்கிறது.மூன்றாவது அலை எதிர்நோக்கி இருக்கும் சூழலில், மூன்று உறுதிமொழிகளை மே அவர்கள் கொடுத்ததுதான். அதோடு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மட்டும் 25,000 கோடி ரூபாய் நிதி வேண்டும், அதை எப்போது அறிவிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை .சட்டமன்ற கூட்டத்தில் அவர்களுடைய அறிவிப்பை பார்த்துவிட்டு திமுக – அதிமுகவுக்கு உள்ள வேறுபாடு என்ன..? அதிமுக சொல்லியதை நிறைவேற்றிய கட்சி, திமுக சொல்லியதே நிறைவேற்றாத கட்சி என்பதை மக்கள் அடையாளம் காண்பார்கள்.எதிர்கட் சி தலைவர் கொராடா தேர்வில் அதிமுக சாதி அரசியல் செயல்பாடு குறித்த கேள்விக்கு.புரட்சித்தலைவர் MGR, அம்மா காலத்தில் “அதிமுக ஜாதி-மதம் பார்த்ததே இல்லை”. தொடர்ந்து வழிவழியாக தான் செயல்பட்டு வருகிறது. இங்கு ஜாதி ரீதியான செயல்பாடுகள் அதிமுகவில் எப்பொழுதும் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.டாஸ்மாக் கடைகள் பிறப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த அரசு கோவில்களை திறப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என செய்தியாளர் கேள்விக்கு.மிக விரைவில் கோயில்களை திறப்பார்கள், அதற்கான முன் பாதுகாப்போடு, முன்னெச்சரிக்கையோடு திருக்கோயில்களை திறப்பார்கள் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மதுரை மக்களை பொறுத்தவரை மீனாட்சி அம்மனை வழிபட்டால் மட்டும்தான் கொரோனா தொற்றிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. உரிய கட்டுப்பாடுகளுடன் திருக்கோயில்களை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிமுக நடவடிக்கை எடுக்காதது குறித்த கேள்விக்கு.தொடர்ந்து பேச மறுத்து அங்கிருந்து எழுந்து சென்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!